×

3 கோட்டங்களில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்: இன்று நடக்கிறது

சென்னை: கே.கே.நகர் கோட்ட அலுவலகம், 2வது மாடி, கே.கே.நகர் துணை மின் நிலைய வளாகத்தில் இன்று மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது. இதேபோல், அம்பத்தூர் கோட்ட அலுவலகம், 3வது மெயின் ரோடு, துணை மின் நிலைய வளாகம், அம்பத்தூர் தொழிற்பேட்டை என்ற முகவரியிலும், மயிலாப்பூர் கோட்ட அலுவலகம், வள்ளுவர் கோட்டம் துணை மின் நிலையம், எண்.97, எம்.ஜி.ஆர் சாலை என்ற முகவரியிலும், தண்டையார்பேட்டை கோட்ட அலுவலகம், எண்.805, டி.எச்.ரோடு, மணிக்கூண்டு எதிரில், தண்டையார்பேட்டை என்ற முகவரியிலும் இன்று மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது. இதில், பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவித்து நிவாரணம் பெறலாம், என மேற்பார்வை பொறியாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

The post 3 கோட்டங்களில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்: இன்று நடக்கிறது appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,KK Nagar ,Ambattur Divisional Office ,3rd Main Road ,Substation Complex ,Ambattur Industrial Estate ,
× RELATED வாலிபரை தாக்கி பைக், செல்போன் பறிப்பு: இருவர் கைது