×

சேவல் சண்டை நடத்திய 3 பேர் கைது

கிருஷ்ணகிரி, நவ.16: சூளகிரி அருகே, தியாகரசனப்பள்ளி பகுதியில் ஏட்டு ரவி மற்றும் போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் அரசு புறம்போக்கு நிலத்தில் மக்கள் கூட்டமாக திரண்டிருந்தனர். போலீசாரை பார்த்ததும், அவர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். அதில் 3பேரை பிடித்து போலீசார் விசாரித்தபோது, அவர்கள் முதுகானப்பள்ளியை சேர்ந்த சூர்யா (27), தியாகரசனப்பள்ளி சிப்பலப்பா(45), சீனிவாசன்(27) என்பதும், சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து, 3 பேரையும் போலீசார் கைது செய்து, அங்கிருந்த 7 டூவீலர்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து கைது செய்யப்பட்ட 3 பேரையும், ஓசூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, ஓசூர் கிளை சிறையில் அடைத்தனர். தப்பியோடியவர்களில் யாருக்கேனும் இதில் தொடர்பு உள்ளதா என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

The post சேவல் சண்டை நடத்திய 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,Ettu Ravi ,Thiagarasanapalli ,Choolagiri ,Dinakaran ,
× RELATED அரசு ஊழியர்களின் சொத்து, கடன் குறித்த...