×
Saravana Stores

சேரம்பாடி வனச்சரகத்தில் யானை கணக்கெடுப்பு பணி துவக்கம்

 

பந்தலூர்,மே24: ஆண்டுதோறும் வனத்துறை சார்பில் யானைகள் கணக்கெடுப்பு மற்றும் புலிகள்,பறவைகள்,வரையாடு உள்ளிட்ட வனவிலங்குகள் கணக்கெடுப்புகள் நடைபெற்று வருகிறது.அதேபோல் இந்த ஆண்டு யானைகள் கணக்கெடுப்பு நேற்று துவங்கியுள்ளது.
கடந்த ஆண்டு கூடலூர் வனக்கோட்டத்தில் 80 யானைகள் இருப்பதாக கணக்கெடுப்பில் தெரிவந்துள்ளது. சேரம்பாடி வனச்சரகத்தில் மட்டும் கடந்த ஆண்டு கணக்கெடுப்பு படி 22 யானைகள் இருந்ததாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

இந்நிலையில் நேற்று சேரம்பாடி வனச்சரகத்திற்குட்பட்ட, கோட்டைமலை, சாமியார்மலை, சின்கோனா, கண்ணம்பள்ளி, மண்ணாத்திவயல் உள்ளிட்ட பகுதிகளில் யானை கணக்கெடுப்பு பணிகளை சேரம்பாடி வனச்சரகம் ரேஞ்சர் அய்யனார் தலைமையிலான வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இந்த பணிகள் மூன்று நாட்கள் நடைபெறுவதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

The post சேரம்பாடி வனச்சரகத்தில் யானை கணக்கெடுப்பு பணி துவக்கம் appeared first on Dinakaran.

Tags : Serambadi Forest ,Bandalur ,Kudalur forest reserve ,Cherambadi… ,Cherambadi Forest ,Dinakaran ,
× RELATED கொளப்பள்ளி குறிஞ்சி நகர் பகுதியில்...