×

செல்போன் காணாமல் போனால் போலீசில் புகார் அளிக்கலாம்

நாமக்கல், ஆக.9: நாமக்கல் மாவட்ட எஸ்.பி.ராஜேஷ்கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள், செல்போன் தொலைந்து போனால், தங்களது அடையாள அட்டையுடன் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுக்கலாம். புகார் பெறப்பட்டதற்கு ரசீது வழங்கப்படும். காவல்நிலையத்தில் காணாமல் போன செல்போனின் ஐஎம்இஐ நம்பரை கொண்டு, சிஇஐஆர் போர்ட்டல் மூலம் பிளாக் செய்து, தொலைந்து போன செல்போனை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து மேலும் விபரங்களுக்கு, 94981 67110, 98941 77310 ஆகிய எண்களில் தொடர்புகொண்டு தகவல் பெறலாம். பொதுமக்கள் இச்சேவையை பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு எஸ்.பி.ராஜேஷ்கண்ணன் தெரிவித்துள்ளார்.

The post செல்போன் காணாமல் போனால் போலீசில் புகார் அளிக்கலாம் appeared first on Dinakaran.

Tags : Namakkal ,Namakkal district ,SP ,Rajeshkannan ,Dinakaran ,
× RELATED டூவீலரில் படுத்துக்கொண்டு சாகசம் செய்தவருக்கு அபராதம்