×

செம்மொழி தின நாட்டியாஞ்சலி முத்துப்பேட்டை அருகே மங்கலூர் அய்யனார் கோயில் கும்பாபிஷேகம்

 

 

முத்துப்பேட்டை, ஜூன் 10: முத்துப்பேட்டை அருகே மங்கலூர் பாமணி ஆற்றங்கரை அய்யனார் கோவில் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. கும்பாபிஷேகம் யாகசாலை பூஜையில் முதல்கால பூஜை துவங்கி நான்காம் கால யாகசாலை பூஜையில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க உலக நன்மை வேண்டியும் விவசாயம் செழிக்க வேண்டிய உலக பொதுமக்கள் நோய் நொடியின்றி வாழ வேண்டிய சிறப்பு யாகம் நடைபெற்றது. தொடர்ந்து யாகசாலையில் வைத்து பூஜிக்க பட்ட கலசம் சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்தபடி ஆலய கோபுரத்தில் வைக்கப்பட்டிருந்த விமான கலசத்தில் சிவாச்சாரியாரால் வேத மந்திரங்கள் முழங்க புனித நீர் ஊற்றப்பட்டது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துக்கொண்டனர்.

அதேபோன்று மங்கலூர் வடக்கு மழை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் காலை 9.30மணிக்கு நடைபெற்றது. முன்னதாக முதல்கால பூஜைகள் துவங்கி நான்காம் கால யாகசாலை பூஜை நடைபெற்று, நேற்றுகாலை பிரதான யாகசாலை பூஜைகள் தொடர்ந்து மகா பூர்ணாஹீதி தீபாராதனைகள் காட்டப்பட்டு கடம் புறப்பாடு நடைபெற்று சிவாச்சாரியாரால் விமான மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது தொடர்ந்து மூலஸ்தானம் கும்பாபிஷேகம் நடைபெற்றது. மாலை மகா அபிசேகம் பின்னர் மகா மாரியம்மன் ஆலய உள் புறப்பாடு நடைபெற்றது இதில் சுற்றுபகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

The post செம்மொழி தின நாட்டியாஞ்சலி முத்துப்பேட்டை அருகே மங்கலூர் அய்யனார் கோயில் கும்பாபிஷேகம் appeared first on Dinakaran.

Tags : Semmozhi ,Dina Natyanjali ,Mangalore ,Ayyanar Temple ,Muthupettai ,Ayyanar ,Temple ,Pamani River ,Kumbabhishekam ,Shivacharyas ,Mangalore Ayyanar Temple Kumbabhishekam ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...