×

சென்னையில் இருந்து தஞ்சாவூருக்கு 1,460 டன் உரம்

தஞ்சாவூர், ஜூன் 23: தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை மாவட்டம் விளங்கி வருகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறும். இதற்காக மேட்டூர் அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம்.

இந்த ஆண்டும் ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் தற்போது தஞ்சாவூர் மாவட்டத்தில் குறுவை சாகுபடிக்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த சாகுபடிக்கு தேவையான விதைகள், உரங்கள் மற்றும் இடுபொருட்கள் வரவழைக்கப்பட்டு இருப்பு வைக்கப்பட்டு தனியார் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று சென்னையில் இருந்து சரக்கு ரயிலில் 1,460 டன் யூரியா உரம் 25 வேகன்களில் தஞ்சைக்கு சரக்கு ரயிலில் நேற்று வந்து இறங்கியது.

பின்னர் உர மூட்டைகள் லாரிகளில் ஏற்றப்பட்டு தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் உள்ள தனியார் விற்பனை கூடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

The post சென்னையில் இருந்து தஞ்சாவூருக்கு 1,460 டன் உரம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Thanjavur ,Tanji district ,Tamil Nadu ,Thanjavur district ,Drowa ,Samba ,Taladi ,Matur dam ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...