×

சென்ட்ரல் – அரக்கோணம் இடையே புறநகர் மின்சார ரயில் சேவையில் மாற்றம்; தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை, ஜூன் 7: சென்னை சென்ட்ரல் – அரக்கோணம் இடையே பராமரிப்பு பணி காரணமாக புறநகர் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து நேற்று தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பு:
 பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்கில் இருந்து இரவு 9.10 மணிக்கு சென்னை சென்ட்ரல் செல்லும் மின்சார ரயில் நாளை ஆவடியுடன் நிறுத்தப்படும். ஆவடி – சென்ட்ரல் இடையே ரயில் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
 அரக்கோணத்திலிருந்து அதிகாலை 4 மணிக்கு வேளச்சேரி செல்லும் மின்சார ரயில் இன்று மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அரக்கோணத்துடன் நிறுத்தப்படும். அரக்கோணம் – சென்னை கடற்கரை இடையே ரயில் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
 வேளச்சேரியில் இருந்து இரவு 10.30 மணிக்கு பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் செல்லும் மின்சார ரயில் நாளை சென்னை கடற்கரையுடன் நிறுத்தப்படும். சென்னை கடற்கரை – பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் இடையே ரயில் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
 பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்கில் இருந்து இரவு 8.25 மணிக்கு வேளச்சேரி செல்லும் மின்சார ரயில் வெள்ளிகிழமை ஆவடியுடன் நிறுத்தப்படும். ஆவடி – சென்னை கடற்கரை இடையே ரயில் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
 பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்கில் இருந்து இரவு 10.45 மணிக்கு சென்னை சென்ட்ரல் செல்லும் மின்சார ரயில் நாளை ஆவடியுடன் நிறுத்தப்படும். ஆவடி – சென்ட்ரல் இடையே தற்காலிகமாக ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது.
 சென்னை சென்ட்ரலில் இருந்து நள்ளிரவு 12.15 மணிக்கு ஆவடி செல்லும் மின்சார ரயில் இன்று முதல் வெள்ளிக்கிழமை வரை முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
 சென்னை கடற்கரையில் இருந்து நள்ளிரவு 1.20 மணிக்கு அரக்கோணம் செல்லும் மின்சார ரயில் இன்று முதல் வெள்ளிக்கிழமை வரை முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
 பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்கில் இருந்து இரவு 11.55 மணிக்கு ஆவடி செல்லும் மின்சார ரயில் நாளை முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
 சென்னை சென்ட்ரலில் இருந்து நள்ளிரவு 11.30 மணிக்கு செல்லும் மின்சார ரயில்கள் நாளை முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post சென்ட்ரல் – அரக்கோணம் இடையே புறநகர் மின்சார ரயில் சேவையில் மாற்றம்; தெற்கு ரயில்வே அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Central – Arakkonam ,Southern Railway ,Chennai ,Chennai Central - Arakkonam ,Central - Arakkonam ,Dinakaran ,
× RELATED கூட்ட நெரிசலைக் குறைக்கும் விதமாக...