×

செங்கோட்டை நகராட்சி அதிகாரி பணியிடை நீக்கம்

செங்கோட்டை, ஜூன் 20: செங்கோட்டை நகராட்சியில் 24 வார்டுகள் உள்ளது. இப்பகுதியில் உள்ள வீடுகளில் நேற்று முன்தினம் வரி வசூல் செய்வதற்காக நகராட்சி வரி வசூல் மேற்பார்வையாளர் மற்றும் ஊழியர்கள் சிலர் செங்கோட்டை மேலூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு சென்றனர். அப்போது, வரி வசூல் மேற்பார்வையாளர் அனந்தராமன் அநாகரீகமாக நடந்து கொண்டதாக நகராட்சி ஆணையர் புனிதனிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர் விசாரணை நடத்தி, அனந்தராமனை பணியிடை நீக்கம் செய்து அதிரடியாக உத்தரவிட்டார்.

The post செங்கோட்டை நகராட்சி அதிகாரி பணியிடை நீக்கம் appeared first on Dinakaran.

Tags : Sengottai Municipal Officer ,Sengottai ,Sengottai Municipality ,Municipal Tax Collection Supervisor ,Melur ,Dinakaran ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...