×

செங்கல்பட்டு நகராட்சியில் துப்புரவு பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு நகராட்சியில் துப்புரவு பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். செங்கல்பட்டு நகராட்சியில் உள்ள 33 வார்டுகளில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். மேலும் வணிக நிறுவனங்கள் ஏராளமாக உள்ளன. இதனால் நகரில் நாளொன்றுக்கு 20 டன் குப்பை சேகரிக்கப்படுகிறது. இதில் 10 டன் நெகிழிகளின் கழிவாக உள்ளது. குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள், உணவகங்களில் கழிவு பொருட்கள் சாலையோரங்களில் கொட்டப்படுகிறது.இவைகளை சேகரித்து தரம் பிரிக்காமல் துப்புரவு பணியாளர்கள் பச்சையம்மன் கோயில் பகுதியில் உள்ள நகராட்சி குப்பை கிடங்கில் கொட்டி வருகின்றனர். இதனால் பல டன் குப்பை மலைபோல்  குவிந்து கிடக்கிறது. தரம் பிரிக்காத குப்பையால் உரம் தயாரிக்கும் பணியில் சுணக்கம் ஏற்படுகிறது. இதனால் குப்பை தரம் பிரித்து குப்பை கிடங்கில் கொட்ட வேண்டும் என நகராட்சி நிர்வாகம், துப்புரவு ஊழியர்களிடம் கூறியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நகராட்சி அலுவலக வளாகத்தில் துப்புரவு ஊழியர்கள்  இன்று காலை முதல் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் பரபரப்பு நிலவியது….

The post செங்கல்பட்டு நகராட்சியில் துப்புரவு பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம் appeared first on Dinakaran.

Tags :
× RELATED தொடர்ந்து 2வது நாளாக தாமதமாக புறப்பட்ட...