×

சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பால் ஊட்டி சாலைகளில் போக்குவரத்து நெரிசல்

ஊட்டி : கோடை சீசன் முடிந்தும் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் கூட்டம் குறையாத நிலையில் அனைத்து சாலையிலும் வாகன நெரிசல் காணப்பட்டது.  நாள் தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்துச் செல்கின்றனர். கடந்த சில ஆண்டுகளாக அண்டை மாநிலங்களான கர்நாடகம் மற்றும் கேரள மாநிலங்களை சேர்ந்தவர்கள் வார விடுமுறை நாட்களில் ஊட்டிக்கு வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். எனினும் கோடை காலமான ஏப்ரல் மற்றும் ேம மாதங்களிலேயே அதிகளவு சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இந்நிலையில், இம்முறையும் கடந்த இரு மாதங்களாக ஊட்டியில் சுற்றுலா பயணிகள் அதிகளவு வந்திருந்தனர். பொதுவாக ஜூன் மாதம் துவங்கினால், பள்ளிகள் திறக்கப்படும் நிலைிதயல், சுற்றுலா பயணிகள் வருகை மிகவும் குறைந்தே காணப்படும். வார விடுமுறை நாட்களிலும் கூட கூட்டம் குறைவாகவே காணப்படும். ஆனால், மே மாத இறுதி வாரம் முதலே ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. பள்ளிகள் திறந்தால், கூட்டம் குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. தனியார் பள்ளிகள் திறந்த போதிலும் ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் கூட்டம் குறையாமல் உள்ளது. நேற்றும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, பைக்காரா படகு இல்லம், தொட்டபெட்டா மற்றும் ஊட்டி படகு இல்லம் போன்ற பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. சுற்றுலா பயணிகள் வாகனங்களால் ஊட்டி – குன்னூர் சாலை, பூங்கா செல்லும் சாலை, தொட்டபெட்டா சாலையில் நேற்று அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் அவதிக்குள்ளாகினர். அதேசமயம், கோடை சீசன் முடிந்தும் ஊட்டியில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக உள்ளதால், வியாபாரிகள், ஓட்டல் மற்றும் காட்டேஜ் உரிமையாளர்கள் மகிழ்ச்சியுள்ளனர். சுற்றுலா பயணிகள் வருகை சற்று அதிகமாக உள்ளதால், நேற்று பல சாலைகள் ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டது. இதனால், உள்ளூர் மக்கள் சற்று சிரமத்திற்குள்ளாகினர்….

The post சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பால் ஊட்டி சாலைகளில் போக்குவரத்து நெரிசல் appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED வயிறு நிறைய சாப்பிடறதை விட மனசு நிறைந்து சாப்பிடணும்!