பொள்ளாச்சி : பொள்ளாச்சி ஆழியாற்றங்கரையோரம் கிடந்த நெகிழிகளை அப்புறப்படுத்தி, சுற்றுச்சூழல் தினத்தையொட்டி தன்னார்வலர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பொள்ளாச்சியில் பல்வேறு இடங்களில் நேற்று சுற்றுச்சூழல் தினம் கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி, பல்வேறு தன்னார்வல அமைப்பினர், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.இதில், பொள்ளாச்சி சேவாலயம் அறக்கட்டளை சார்பில் நேற்று, உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, அம்பராம்பாளையம் ஆற்றங்கரையில் ஆங்காங்கே சிதறி கிடந்த பிளாஸ்டிக் கழிவு பொருட்களை அப்பபுறப்படுத்தும் பணி நடைபெற்றது.இதில், ரெட்டியாரூர் என்ஜிஎன்ஜி பள்ளி பசுமை படை அமைப்பினர், மாரியம்மன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள், பசுமைப்படை ஒருகிணைப்பாளர்கள் பலர் கலந்து கொண்டு, ஆழியாற்றங்கரையோரம் கிடந்த நெகிழிகளை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 3 சாக்கு பைகளில் நெகிழிகளை அப்புறப்படுத்தி, பொதுமக்களிடையே சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்….
The post சுற்றுச்சூழல் தினத்தையொட்டி ஆழியாற்றங்கரை ஓரத்தில் பிளாஸ்டிக்கை அப்புறப்படுத்தி விழிப்புணர்வு appeared first on Dinakaran.