×

அரசு கலைக்கல்லூரியில் முதுநிலை பட்டப்படிப்புக்கு கலந்தாய்வு

கரூர்: கரூர் அரசுகலைக்கல்லூரியில் முதுநிலை பட்டப்படிப்புக்கான கலந்தாய்வு நேற்று நடைபெற்றது. இருமடங்கு அதிகமாக மாணவ, மாணவியர் வந்ததால் கூட்டம் அலைமோதியது,, கரூர் அரசு கலைக்கல்லூரியில் (தன்னாட்சி) மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் முறையில் நடைபெற்று வருகிறது. இளங்கலை படிப்புக்கான கலந்தாய்வு முடிவுற்ற நிலையில் கடந்த 2நாட்களாக முதுநிலை படிப்புகளுக்கான கலந்தாய்வு நடைபெற்றது. நேற்று கலைப்பாடப் பிரிவுகளான தமிழ் 30, ஆங்கிலம் 30, வரலாறு 30, பொருளாதாரம் 30, எம் காம் 30 இடங்கள் என மொத்தம் 150 இடங்களுக்கு கலந்தாய்வு முறையில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

கல்லூரி முதல்வர் ஜோதி வெங்கடேசுவரன் மற்றும் பேராசிரியர்கள் கலந்தாய்வினை நடத்தினர். நேற்று முன்தினம் அறிவியல் பாடப்பிரிவுகளுக்கான கலந்தாய்வு நடைபெற்றது. இதில் கணிதம் 30, இயற்பியல் 30, வேதியியல் 25, தாவரவியல் 25, விலங்கியல் 25, கணினி அறிவியல் 42, உள்பட 197 பாடப்பிரிவுகளுக்கு மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இருநாட்களும் 347 இடங்களுக்கு மாணவர்கள் கலந்தாய்வு முறையில் தேர்வு செய்யப்பட்டனர். இந்த இடங்களுக்கு 650பேர் விண்ணப்பித்திருந்தனர். அதிக அளவில் மாணவர்கள் வந்ததால் கூட்டம் அலைமோதியது.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED மாமல்லபுரம் கடற்கரையில் 10 கி.மீ...