×

சீர்காழி பகுதி ரேஷன் கடைகளில் பார்வையில் படும்படி வைத்து பொருட்களை எடை போட வேண்டும்

சீர்காழி, மே 30: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகாவில் அமைந்துள்ள ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு அரிசி கோதுமை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. பெரும்பாலான ரேஷன் கடைகளில் பொதுமக்கள் வாங்கும் பொருட்களை பொதுமக்கள் பார்வையில் எடை போட்டு வழங்கப்படுவது இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் பொருட்களின் எடை குறைவதாகவும் இதுகுறித்து ரேஷன் ஊழியரிடம் கேட்கும் போது உரிய பதில் கிடைப்பதில்லை என ரேஷன் அட்டைதாரர்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே ரேஷன் கடைகளில் வாங்கப்படும் பொருட்களின் எடை சரியாக இருக்கின்றதா என்பதை நுகர்வோர் தெரிந்து கொள்ளும் வகையில், எடை மிஷினை பார்வையில் படும்படி வைத்து பொருட்களை எடை போட்டு வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

The post சீர்காழி பகுதி ரேஷன் கடைகளில் பார்வையில் படும்படி வைத்து பொருட்களை எடை போட வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Sirkazhi ,Sirkazhi taluka ,Mayiladuthurai district ,Dinakaran ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...