×

சீர்காழி ஒன்றிய திமுக இளைஞரணி அமைப்பாளர் நியமனம்

 

சீர்காழி, ஜூன் 27: சீர்காழி கிழக்கு ஒன்றிய திமுக இளைஞரணி அமைப்பாளராக தினகரன் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி கிழக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளராக திருநகரி வேதராஜபுரத்தை சேர்ந்த ஐயப்பன் மகன் தினகரன் என்பவர் மயிலாடுதுறை மாவட்ட திமுக செயலாளரும், பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன் பரிந்துரையின் பேரில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் உத்தரவின் பேரில் நியமனம் செய்யப்பட்டுள்ளார். புதிதாக ஒன்றிய இளைஞரணி அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள தினகரன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், மயிலாடுதுறை மாவட்ட திமுக செயலாளர் நிவேதா முருகன், சீர்காழி எம்எல்ஏ பன்னீர்செல்வம், திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் முத்து மகேந்திரன், ஜி.எம்.ரவி, முன்னாள் ஒன்றிய குழு தலைவர் கமல ஜோதி தேவேந்திரன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மருது, திமுக ஒன்றிய செயலாளர் பஞ்சு குமார், ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துள்ளார்.

 

The post சீர்காழி ஒன்றிய திமுக இளைஞரணி அமைப்பாளர் நியமனம் appeared first on Dinakaran.

Tags : Disruptive Union ,Dimuka ,SHIRGAZHI ,DINAKARAN ,DIMUKA YOUTH ORGANIZATION ,SIRGAZHI ,EAST ,Mayiladuthura District ,Sirkazhi East Union ,Aiyappan Mahan Dinakaran ,Thirunagari Vedarajapuram ,Mayiladuthura District Dimuka ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...