×

சீர்காழி அருகே விஷ வண்டுகள் அழிப்பு

 

சீர்காழி, ஜூலை 31: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பனமங்கலம் துறையூர் கிராமத்தில் அமைந்துள்ள நகராட்சி தொடக்கப்பள்ளி முன்பு ஒரு பனை மரத்தில் விஷ வண்டுகள் கூடு கட்டி இருந்தது. அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகளை அச்சுறுத்தி வந்தது.

இதனைத் தொடர்ந்து 21வது வார்டு கவுன்சிலர் முழுமதி இமயவரம்பன் சீர்காழி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தார். தங்களின் பேரில் சீர்காழி தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று நீண்ட நேரம்போராடி தீப்பந்தம் மூலம் பனை மரத்தில் இருந்த விஷ வண்டுகளை அழித்தனர். இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும், நகர மன்ற கவுன்சிலருக்கும், தீயணைப்பு துறை வீரருக்கும் நன்றியும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.

The post சீர்காழி அருகே விஷ வண்டுகள் அழிப்பு appeared first on Dinakaran.

Tags : Sirkazhi ,Panamangalam Sharayur village ,Mayiladuthurai district ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...