×

சிவகிரியில் அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு சீருடை, புத்தகங்கள் சதன்திருமலைகுமார் எம்எல்ஏ வழங்கினார்

சிவகிரி,ஜூன் 6:சிவகிரி பேரூராட்சியில் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு சீருடை, புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வாசுதேவநல்லூர் எம்எல்ஏ சதன் திருமலை குமார், யூனியன் சேர்மன் பொன் முத்தையா ப்பாண்டியன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அங்கன்வாடி குழந்தைகளுக்கு சீருடை மற்றும் புத்தகங்களை வழங்கினர். பேரூராட்சி தலைவர் கோமதி சங்கரி வரவேற்றார். குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் சுமதி, மேற்பார்வையாளர் அன்பரசி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் திமுக மாவட்ட துணைச் செயலாளர் மனோகரன், பேரூர் செயலாளர் சேது சுப்பிரமணியன், புளியங்குடி மதிமுக நகர செயலாளர் ஜாகீர் உசேன், முன்னாள் ஒன்றிய செயலாளர் சிவசுப்பிரமணியன், சுந்தர வடிவேலு உள்பட பலர் கலந்து கொண்டனர். அங்கன்வாடி பணியாளர் கனிமொழி நன்றி கூறினார்.

The post சிவகிரியில் அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு சீருடை, புத்தகங்கள் சதன்திருமலைகுமார் எம்எல்ஏ வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : MLA ,Sadhan Thirumalaikumar ,anganwadi ,Sivagiri ,Sivagiri Town Panchayat ,Vasudevanallur ,Union ,Pon ,Muthiah Pandian ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...