×

சிவகளையில் அரசு துணை சுகாதார மையம்

ஏரல், ஏப். 29: சிவகளையில் புதிதாக ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அரசு துணை சுகாதார மையத்தை கனிமொழி எம்பி திறந்து வைத்தார். ஏரல் அருகேயுள்ள சிவகளையில் தூத்துக்குடி எம்பி கனிமொழி முயற்சியில் சமூகப் பொறுப்பு நிதியில் இருந்து ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் அரசு துணை சுகாதார மையம் கட்டப்பட்டு திறப்பு விழா நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் இளம்பகவத் தலைமை வகித்தார். மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட சுகாதார அலுவலர் யாழினி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தூத்துக்குடி எம்பி கனிமொழி, புதிய துணை சுகாதார மையத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து, குத்துவிளக்கேற்றினார்.
நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் ஐஸ்வர்யா, திருசெந்தூர் ஆர்டிஓ சுகுமாறன், வை. பிடிஓக்கள் கிறிஸ்டோபர் தாசன், சின்னத்துரை, திமுக பொதுக்குழு உறுப்பினர் காவல்காடு சொர்ணகுமார்,

தெற்கு மாவட்ட அவைத் தலைவர் அருணாசலம், துணை செயலாளர் ஆறுமுகப்பெருமாள், வை. மத்திய ஒன்றிய செயலாளர் பிஜி ரவி, பேரூர் செயலாளர்கள் நவநீதமுத்துக்குமார், கண்ணன், மாவட்ட பிரதிநிதி ஜெயக்குமார், ஒன்றிய பொருளாளர் பத்ரகாளிமுத்து, துணை செயலாளர்கள் கிருஷ்ணன், சண்முகராஜா, விவசாய சங்கம் தலைவர் மதிவாணன், ஓய்வுபெற்ற வன அதிகாரி பிள்ளை விநாயகம், காங். பொதுச் செயலாளர் பிச்சையா, நிர்வாகிகள் ஹைதர் அலி, சுப்பிரமணியன், சுப்பையா, பண்டாரசாமி, வட்டார மருத்துவ அலுவலர் தினேஷ், சிவகளை மருத்துவர் ஜனனி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் முருகேசன், செவிலியர் இந்துமதி, சமுதாய செவிலியர் மேரிசெல்வி, சுகாதார ஆய்வாளர் தர், சிவகளை பஞ்சாயத்து எழுத்தர் வெங்கடேஷ் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post சிவகளையில் அரசு துணை சுகாதார மையம் appeared first on Dinakaran.

Tags : Government Sub-Health Centre ,Sivakalai ,Eral ,Kanimozhi ,Government ,Sub ,Health Centre ,Thoothukudi ,Social ,Eral… ,Dinakaran ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...