×

சிவகங்கை மாவட்டத்தில் நீட்தேர்வில் 63 பேர் ஆப்சென்ட்

சிவகங்கை, மே 5: தேசிய தேர்வு மையத்தின் மூலம் நீட் தேர்வு 2025 (தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு) நேற்று நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் நீட் தேர்வு சிவகங்கை கேந்திரிய வித்யாலயா பள்ளி மற்றும் சிவகங்கை அரசு மகளிர் கலைக்கல்லூரி, காரைக்குடி கேந்திரிய வித்யாலயா பள்ளி மற்றும் காரைக்குடி அழகப்பா பாலிடெக்னிக் கல்லூரி ஆகிய 4 தேர்வு மையங்களில் நடைபெற்றது.

நேற்று பிற்பகல் 2 மணி முதல் மாலை வரை நடைபெற்றது.மொத்தம் 1,693மாணவ, மாணவிகள் தேர்வை எழுத விண்ணப்பித்த நிலையில் 63 பேர் ஆப்சென்ட் ஆகினர். 1,630பேர் தேர்வை எழுதினர். தேர்வையொட்டி மாணவ, மாணவிகள் கடுமையான சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.

The post சிவகங்கை மாவட்டத்தில் நீட்தேர்வில் 63 பேர் ஆப்சென்ட் appeared first on Dinakaran.

Tags : Sivaganga district ,Sivaganga ,NEET ,National Examination Center ,Sivaganga Kendriya Vidyalaya School ,Sivaganga Government Women's Arts College ,Dinakaran ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...