×

சிவகங்கையில் ஜூலை 11ல் ஓய்வூதியர் குறைதீர் கூட்டம்

சிவகங்கை, ஜூன் 14: சிவகங்கையில் ஓய்வு பெற்ற அரசு பணியாளர்களுக்கான ஓய்வூதியர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற ஜூலை 11 அன்று நடைபெறவுள்ளது. கலெக்டர் ஆஷாஅஜித் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் ஓய்வு பெற்ற அரசு பணியாளர்களுக்கான ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் கூட்டம், ஜூலை 11 அன்று காலை 10.30 மணியளவில் நடைபெறவுள்ளது. எனவே ஓய்வு பெற்ற அரசுப் பணியாளர்கள் தங்களது மனுக்களை இரட்டைப்பிரதிகளில், உரிய இணைப்புகளுடன் வருகின்ற ஜூன் 20ம் தேதிக்குள் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டரின் நேர்முக உதவியாளரிடம் (கணக்குகள்) நேரில் சமர்ப்பித்து பயன்பெறலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post சிவகங்கையில் ஜூலை 11ல் ஓய்வூதியர் குறைதீர் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Pensioner ,Sivaganga ,Pensioner Grievance Redressal Day ,Collector ,Asha Ajith ,Collectorate… ,Pensioner Grievance Redressal Meeting ,Dinakaran ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...