×

சிவகங்கையில் ஜூன் 26ல் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

 

சிவகங்கை, ஜூன் 23: கலெக்டர் ஆஷாஅஜித் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:சிவகங்கை கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்றக்கூடத்தில் ஜூன் 26 அன்று பகல் 11 மணியளவில், சிவகங்கை மாவட்ட முன்னாள் படைவீரர்கள், படைப்பணியாற்றுவோர், சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறவுள்ளது.
இதில் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்கள், படைவீரர்கள், சார்ந்தோர்கள் அன்று பகல் 10.30மணியளவில் முன்னாள் படைவீரர் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு வருகை புரிந்து, தங்களது குறைகளை இரட்டை பிரதிகளில் மனுவாக வழங்கி, நிவர்த்தி செய்து பயனடையலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post சிவகங்கையில் ஜூன் 26ல் குறை தீர்க்கும் நாள் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Grievance Redressal Day ,Sivaganga ,Collector ,Asha Ajith ,Development Forum ,Sivaganga Collectorate.… ,Dinakaran ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...