×

சிறுவளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் சர்வதேச புவி தின விழா

அரியலூர், ஏப்.23: அரியலூர் அடுத்த சிறுவளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில், சர்வதேச புவி தின விழா நேற்று நடைபெற்றது. சிறுவளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடந்த சர்வதேச புவி தின விழாவிற்கு தலைமை ஆசிரியர் சின்னதுரை தலைமை வகித்தார். வனவர்கள் சிவக்குமார், ஜீவா ராமன் , சுற்றுச்சூழல் ஆர்வலர் நிக்கில் ராஜ், பசுமை படை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழ்ச்செல்வி முன்னிலை வகித்தால். மாவட்ட வன அலுவலர் இளங்கோவன் கலந்து கொண்டு, எனவே இயற்கை வளங்களைப் பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் கடமை மட்டுமல்ல, பொறுப்பும் கூட.

இயற்கை வளங்களின் அவசியம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், அவை அழிவதைத் தடுக்க முன்வரவேண்டும் என்றார். பின்னர் அவர் பல்வேறு போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவ,மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். நிகழ்ச்சியில், ஆசிரியர்கள் தனலட்சுமி, அபிராமி, பாலமுருகன், அந்தோணிசாமி மற்றும் பசுமை படை மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post சிறுவளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் சர்வதேச புவி தின விழா appeared first on Dinakaran.

Tags : International Earth Day ,Siruvalur Government High School ,Ariyalur ,Headmaster ,Chinnadurai ,Siruvalur ,Government High School ,Vanavars Sivakumar ,Dinakaran ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...