×

சிறுமிக்கு பாலியல் தொல்லை

 

திருச்சி, மார்ச் 20: திருச்சியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தை கொடுத்து தலைமறைவாக உள்ள நபரை போலீசார் தேடி வருகின்றனர். திருச்சியை சேர்ந்த 10 வயது சிறுமி கடந்த 17ம் தேதி மாலை தனது வீட்டருகே விளையாடி கொண்டிருந்துள்ளார். அவ்வழியாக வந்த வாலிபர் அச்சிறுமியை அருகிலிருந்த ஒரு வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த விவரம் தெரியாத பெற்றோர் மற்றும் உறவினர்கள் சிறுமி பூப்பெய்துவிட்டதாக நினைத்து தொடர்புடைய சடங்குகளுக்கு ஏற்பாடு செய்துள்ளனர். பின்னர் சிறுமியின் உடலில் நக கீறல்கள் இருந்ததையடுத்து அவரிடம் விசாரித்தபோது, உண்மையை சிறுமி தெரிவித்துள்ளார். அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மலைக்கோட்டை போலீசில் புகார் செய்ததுடன் சிறுமியை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவ சோதனையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது. இதுகுறித்து கோட்டை மகளிர் போலீசார் அந்த வாலிபரை ேதடி வருகின்றனர்.

The post சிறுமிக்கு பாலியல் தொல்லை appeared first on Dinakaran.

Tags : Trichy ,
× RELATED திருச்சி விமான நிலையத்தில் ரூ.32 லட்சம் மதிப்பிலான இ- சிகரெட்கள் பறிமுதல்