- விருதுநகர்
- சிறுபான்மை மக்கள் நலக் குழு
- ராஜேந்திரன்
- தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு
- விருதுநகர் மூலிப்பட்டி அரண்மனை
- தின மலர்
விருதுநகர், மே 19: விருதுநகரில் சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. விருதுநகர் மூளிப்பட்டி அரண்மனை அருகே தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் நடைபெற்ற சிறப்பு கருத்தரங்கிற்கு மாவட்டத் தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் சீனிவாசன் வரவேற்றார். மாவட்ட செயலாளர் மரியடேவிட், மாவட்ட பொருளாளர் நாகூர் மீரான், மாநிலக்குழு உறுப்பினர் தஸ்தகீர் அஹமது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்கருத்தரங்கினை துவக்கி வைத்து மாநிலச் செயலாளர் தாமஸ்சேவியர் பேசினார். சின்னப்பள்ளிவாசல் ஜமாத் தலைவர் நூருல் அமீன், பங்குத் தந்தை அந்தோணி பாக்கியம் ஆகியோர் விளக்கிப் பேசினர். எழுத்தாளர் பாரதிகிருஷ்ணகுமார் “எங்கே செல்கிறது தேசம்? என்ன செய்வதாய் உத்தேசம்?“ என்ற தலைப்பில் கருத்துரை வழங்கினார். முடிவில் மாவட்ட துணைத் தலைவர் பாக்கியராஜ் நன்றி கூறினார். மேலும் இதில் மாவட்ட நிர்வாகிகள் ராமு, ஜெயா, தீண்டாமை ஒழிப்பு முன்னணி, மாநிலக்குழு உறுப்பினர் ஊர்காவலன், மாவட்ட பொருளாளர் சுப்புராம், மாவட்ட ஐக்கிய ஜமாத் தலைவர் முகமது எகியா உட்பட பலர் பங்கேற்றனர்.
The post சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் விருதுநகரில் சிறப்பு கருத்தரங்கம் appeared first on Dinakaran.
