×

சிறந்த சுற்றுச்சூழல் செயல்பாடுகளுக்காக திருச்சி மாவட்ட கலெக்டருக்கு பசுமை விருது: மாவட்ட குறு மற்றும் சிறு தொழில்கள் சங்கம் பாராட்டு

திருச்சி, ஜூன் 6: உலக சுற்றுச்சூழல் தின விழாவை முன்னிட்டு மாநில அளவிலான விழாவில், சிறந்த சுற்றுச்சூழல் செயல்பாடுகளுக்காக, மாநில முதல்வர் மு.க.ஸ்டாலின் கரங்களால் விருது பெற்ற திருச்சி கலெக்டர் பிரதீப்குமாருக்கு பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும், திருச்சி மாவட்ட குறு மற்றும் சிறு தொழில்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதுகுறித்த திருச்சி மாவட்ட குறு மற்றும் சிறு தொழில்கள் சங்கம் சார்பில் தெரிவித்துள்ளதாவது, உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற மாநில அளவிலான விழாவில், தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமாருக்கு சிறந்த சுற்றுச்சூழல் செயல்பாடுகளுக்கான பசுமை விருது வழங்கி கவுவித்துள்ளார்.

இச்சிறப்புக்குரிய அங்கீகாரம் திருச்சி மாவட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் வாயிலாக கிடைக்கப்பெற்றுள்ளது. இதனால் திருச்சிக்கு கலெக்டர் பிரதீப் குமார் மேலும் பெருமை சேர்த்துள்ளார். இதற்காக திருச்சி மாவட்ட குறு மற்றும் சிறு தொழில் சங்கம் சார்பாக மாவட்ட கலெக்டருக்கு நெஞ்சார்ந்த பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம் என சங்கத்தலைவர் முகில் ராஜப்பா தெரிவித்துள்ளார்.

The post சிறந்த சுற்றுச்சூழல் செயல்பாடுகளுக்காக திருச்சி மாவட்ட கலெக்டருக்கு பசுமை விருது: மாவட்ட குறு மற்றும் சிறு தொழில்கள் சங்கம் பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Trichy District ,Trichchi ,World Environment Day ,President of the State ,H.E. K. Accolades ,Trichy Collector ,Pradeep Kumar ,Stalin ,Tru ,Minor ,District Micro and Small Businesses Association ,Dinakaran ,
× RELATED மாவட்ட மைய நூலகத்தில் சதுரங்க பயிற்சி முகாம்