×

சிப்காட்டில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு சுற்றுச்சூழல் தினத்தையொட்டி

செய்யாறு, ஜூன் 7: உலகச் சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, செய்யாறு சிப்காட் வளாகத்தில் உள்ள தனியார் தொழிற்சாலை நிறுவனத்தில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில், உதவி சுற்றுச்சூழல் பொறியாளர் கதிர், நெகிழி மாசு மற்றும் அதன் பாதிப்புகளை தொழிலாளர்கள் அனைவருக்கும் எடுத்துரைத்து தொழிற்சாலை வளாகப் பகுதியில் மறுக்கன்றை நட்டனர். தமிழ்நாடு ஒருங்கிணைந்த கழிவு மேலாண்மை கூட்டமைப்பின் நிர்வாக தலைவர் டாக்டர் சங்கர் மற்றும் கம்பெனி பொறியாளர்கள் மற்றும் பணியாளர்கள் மரக்கன்றுகளை நட்டு மாசு இல்லா விழாவாக கொண்டாடினர். விழாவின் முடிவில் தொழிலாளர்களுக்கு மஞ்சப்பை அவசியத்தை எடுத்துரைத்து அனைவருக்கும் மஞ்சப்பை விநியோகிக்கப்பட்டது. தொடர்ந்து மாசு ஏற்படுத்தும் நெகிழி இல்லா உலகை படைப்போம் என உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

The post சிப்காட்டில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு சுற்றுச்சூழல் தினத்தையொட்டி appeared first on Dinakaran.

Tags : SIPCOT ,Environment Day ,Cheyyar ,World Environment Day ,Assistant ,Kathir ,Tamil Nadu Pollution Control Board ,Dinakaran ,
× RELATED மானுடத்தை நேசித்தவர் மகாகவி பாரதி...