சின்னமனூர், ஜூன் 23: சின்னமனூர் சிபாலக்கோட்டை சாலையில் பழைய பாலம் பிரிவில் பழக்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. நேற்று மாலை அந்த கடையில் யூபிஎஸ் வெடித்து சிதறியதில், பழக்கடை தீப்பிடித்து எரிந்தது. அந்த நேரம் கடையில் இருந்தவர்கள் சுதாரித்துக் கொண்டு தப்பியதில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
சின்னமனூர் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் சுமார் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில் கடையில் இருந்த பழங்கள் மற்றும் பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமாகின. இது குறித்து சின்னமனூர் போலீசாரும் ஆய்வு செய்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவத்தால் சுமார் ஒரு மணி நேரம் வரை அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
The post சின்னமனூர் பழக்கடையில் தீ விபத்து appeared first on Dinakaran.
