×

சாலையோர ஆக்கிரமிப்பால் அவதி

 

வருசநாடு, ஜூன் 27: வருசநாடு அருகே வாய்க்கால்பாறை கிராமத்தில் சாலைகளின் இருபுறமும் ஆக்கிரமிப்பு அதிகரித்த காரணத்தால் வாகனங்கள் செல்வதில் மிகவும் சிக்கல் நிலை வருகிறது. இதே போல் வாய்க்கால் பாறை கிராமத்தில் இருந்து அரசு மேல்நிலைப் பள்ளி செல்லும் சாலையும் மிகவும் குண்டும் குழியுமாக உள்ளது.
இதனால் ஒவ்வொரு நாளும் பொதுமக்கள் சாலையோரங்களில் வாகனங்களை விலகிச் செல்லும் பொழுதும் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. இது சம்பந்தமாக கிராம மக்கள் கிராமசபை கூட்டங்களில் மனுவாக அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் கூறுகின்றனர்.

The post சாலையோர ஆக்கிரமிப்பால் அவதி appeared first on Dinakaran.

Tags : Varusanadu ,Vaikkalparai village ,Government Higher Secondary School ,Dinakaran ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...