×
Saravana Stores

சாலையில் திரியும் மாடுகளின் உரிமையாளருக்கு போலீஸ் எஸ்பி எச்சரிக்கை

திருவள்ளூர்: மாவட்ட போலீஸ் எஸ்பி வருண்குமார் வெளியிட்ட அறிக்கை:  மாவட்டத்தில் நெடுஞ்சாலை ஓரங்களில் பகல், இரவு நேரங்களில் அதிக அளவில் மாடுகள் சுற்றித்திரிவதால் வாகன விபத்து ஏற்படுகிறது. இதனால் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கும் விதமாக நெடுஞ்சாலை ஓரங்களில் சுற்றித் திரியும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், 5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும். மேலும், மாடுகளை பறிமுதல் செய்து கோசாலையில் ஒப்படைக்கப்படும்.கடந்த ஜனவரி மாதம் முதல் நேற்று வரை சாலைகளில் சுற்றித்திரிந்த மாடுகள் மூலமாக 35 விபத்துகள் ஏற்பட்டு 17 பேர் உயிரிழந்துள்ளனர். சாலையில் திரியும் கால்நடைகளை குறித்து வாட்ஸ்அப் எண் – 6379904848 மூலமாகவோ தகவல் தெரிவிக்கலாம். இவ்வாறு  தெரிவித்துள்ளார்….

The post சாலையில் திரியும் மாடுகளின் உரிமையாளருக்கு போலீஸ் எஸ்பி எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Police SP ,Tiruvallur ,SP ,Varunkumar ,Dinakaran ,
× RELATED தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 6...