×

சாலைப்புதூர் சுகாதார நிலையத்தில் தீத்தடுப்பு ஒத்திகை

சாத்தான்குளம், ஏப். 17: சாலைப்புதூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தீயணைப்பு துறை சார்பில் தீத்தடுப்பு மற்றும் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. சாத்தான்குளம் அருகே சாலைப்புதூரில் செயல்படும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சாத்தான்குளம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை நிலை அலுவலர் இசக்கி தலைமையில் தீ விபத்து மற்றும் மழை வெள்ள காலங்களில் எப்படி தப்பிப்பது குறித்த ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. இதில் சுகாதாரத்துறை ஊழியர்களுக்கும், பொது மக்களுக்கும் தீ விபத்திலிருந்து எப்படி பாதுகாப்பது குறித்தும் தீயணைப்பு சிலிண்டர் எப்படி பயன்படுத்த வேண்டும். மழை வெள்ள காலங்களில் எப்படி தப்பிக்க வேண்டும் என்பதை தீயணைப்பு வீரர்கள் செயல்விளக்கம் மூலம் பயிற்சி அளித்தனர். தீயணைப்பு நிலைய அலுவலர்கள் மாரிமுத்து சுடலை, சுரேஷ் சாமுவேல், துரை ஆகியோர் செயல்விளக்கத்தில் ஈடுபட்டனர். நிகழ்வில் மருத்துவ அதிகாரிகள் தேன்மொழி, வெண்முகில், சுகாதார ஆய்வாளர் ஜேசுராஜ், நர்சிங் ஊழியர்கள் கவிதா, மகேஸ்வரி, பொன்சீலி, மருத்துவமனை ஊழியர்கள் விமல் கேபா, உச்சினிமாகாளி மற்றும் மருத்துவமன ஊழியர்கள், டெங்கு மஸ்தூர் பணியாளர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர் சுகாதார ஆய்வாளர் ஜேசுராஜ் நன்றி கூறினார்.

The post சாலைப்புதூர் சுகாதார நிலையத்தில் தீத்தடுப்பு ஒத்திகை appeared first on Dinakaran.

Tags : Salaiputhur Health Centre ,Sathankulam ,Fire Department ,Salaiputhur Primary Health Centre ,Fire and Rescue Department ,Sathankulam Primary Health Centre ,Salaiputhur ,Sathankulam… ,Dinakaran ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...