×

சாத்தூர் ரயில் நிலையத்தில் கூடுதல் நிழற்குடை அமைக்கப்படுமா? பயணிகள் எதிர்பார்ப்பு

 

சாத்தூர், ஜூன் 16: சாத்தூர் ரயில் நிலையம் முதல் நடை மேடையில் கூடுதல் நிழற்குடை அமைக்க பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சாத்தூர் ரயில் நிலையத்தில் இருந்து டெல்லி, மும்பை, மைசூர், ஈரோடு, கன்னியாகுமரி, திருவனந்தபுரம், குருவாயூர் ஆகிய முக்கிய நகரங்களுக்கு பொதுமக்கள் ரயிலில் சென்று வருகின்றனர். முதல் நடை மேடையில் போதியளவு நிழற்குடை இல்லாததால் பயணிகள் வெயில் மற்றும் மழை காலத்தில் சிரமப்படும் நிலையுள்ளது.

ஆகவே பயணிகள் வசதிக்காக ரயில்வே நிர்வாகம் கூடுதலாக நிழற்குடை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.  இது குறித்து பயணி பிரசாத் கூறுகையில், முதல் நடைமேடையில் குளிர்சாதன வசதி உள்ள பெட்டிகள் நிற்கும் பகுதியில் நிழற்குடை இல்லாததால் மழை நேரத்தில் ஆடைகள் நனைந்தே பயணிக்க வேண்டியுள்ளது. ரயில்வே நிர்வாகம் முதல் நடை மேடை அமைந்துள்ள பகுதி முழுவதும் நிழற்குடை அமைத்து கொடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

The post சாத்தூர் ரயில் நிலையத்தில் கூடுதல் நிழற்குடை அமைக்கப்படுமா? பயணிகள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.

Tags : Sattur railway station ,Sattur ,Delhi ,Mumbai ,Mysore ,Erode ,Kanyakumari ,Thiruvananthapuram ,Guruvayur… ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...