×

சாகுபுரம் கமலாவதி பள்ளி சிபிஎஸ்இ தேர்வில் சாதனை

ஆறுமுகநேரி, மே 15: சாகுபுரம் கமலாவதி மேல்நிலைப்பள்ளி சிபிஎஸ்இ 10ம் வகுப்பு மற்றும் பிளஸ்2 தேர்வில் சிறப்பிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. சாகுபுரம் கமலாவதி மேல்நிலைப் பள்ளியில் சிபிஎஸ்இ பிளஸ்2 தேர்வில் மாணவி விஷாலினி 478 மதிப்பெண் பெற்று முதலிடத்தையும், மாணவர் கேத்ரபாலன் 464 மதிப்பெண் பெற்று 2வது இடம், மாணவி ஜோஷிபா ஸ்னோபி 457 மதிப்பெண் எடுத்து 3வது இடமும் பிடித்து சாதனை படைத்துள்ளனர். 5 மாணவ- மாணவிகள் 450 மதிப்பெண்ணுக்கு மேலும், 25 மாணவ- மாணவிகள் 400க்கும் மேலும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வில் மாணவி ஹர்ஷவீனா 472 மதிப்பெண் பெற்று முதலிடத்தையும், மாணவி அமிர்தஸ்ரீ 469 மதிப்பெண் பெற்று 2வது இடம், மாணவர் மாணிக் ஷிவ் ஷர்மாஜி 464 மதிப்பெண் பெற்று 3வது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர். இதில் 6 மாணவ- மாணவிகள் 450க்கு மேல் மதிப்பெண்ணும், 18 மாணவ- மாணவிகள் 400க்கு மேல் மதிப்பெண்ணும் பெற்றுள்ளனர். சாதனை படைத்த மாணவ- மாணவிகளை பள்ளி டிரஸ்டிகளும் டிசிடபிள்யூ. மூத்த செயல் உதவித்தலைவர் னிவாசன், மூத்த பொதுமேலாளர் ராமச்சந்திரன், பள்ளி ஆலோசகர் உஷாகணேஷ், அட்மினிஸ்ட்ரேட்டர் மதன், முதல்வர் ஸ்டீபன் பாலாசீர், துணை முதல்வர் சுப்புரத்னா, தலைமை ஆசிரியர் ஆழ்வான் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டினர்.

The post சாகுபுரம் கமலாவதி பள்ளி சிபிஎஸ்இ தேர்வில் சாதனை appeared first on Dinakaran.

Tags : Sakupuram Kamalavathi School ,CBSE ,Arumuganeri ,Sakupuram Kamalavathi Higher Secondary School ,Vishalini ,Dinakaran ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...