×

சமூக வலைதளங்களில் படம் பகிர வேண்டாம்

சேலம், மே16: சமூக வலைதலங்களில் புகைப்படத்தை வெளியிட வேண்டாம் என்று கல்லூரி மாணவிகளுக்கான விழிப்புணர்வு முகாமில் போலீஸ் உதவி கமிஷனர் அறிவுரை வழங்கினார். சேலம் கோரிமேட்டில் உள்ள அரசு மகளிர் கலைக்கல்லூரியில் நேற்று போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு மற்றும் தற்கொலை தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு முகாம் நடந்தது. கன்னங்குறிச்சி இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமை தாங்கினார். அஸ்தம்பட்டி உதவி கமிஷனர் லட்சுமிபிரியா தலைமை வகித்து பேசியதாவது:கல்லூரி வாழ்க்கை இனிமையானது. இதனை நீங்கள் நல்லமுறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும். உங்களது உள்ளங்கையில் உலகம் இருக்கிறது. 95 சதவீதத்திற்கும் மேலாக செல்போன் பயன்படுத்துகின்றீர்கள். டூவிட்டர், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் போன்ற சமூகவலைதளங்களை நீங்கள் அளவோடு பயன்படுத்திக்கொள்ள வேண்டும். தேவையில்லாமல் புகைப்படத்தை பதிவிட வேண்டாம். இதனால் ஆபத்து அதிகமாக இருக்கிறது. தேவையில்லாமல் படத்தை மார்பிங் செய்து விடுவார்கள். இதனால் ஏற்படும் அவமானத்தால் தவறான முடிவை எடுத்துவிடுவீர்கள். எனவே விழிப்புடன் இருக்க வேண்டும்.

தேர்வில் தோல்வி அடைவதாலும், காதலில் தோல்வி என சிலர் தற்கொலை செய்து கொள்கின்றனர். அவ்வாறு செய்வதன் மூலம் நம் வாழ்வை நாமே அழித்துக்ெகாள்ளலாமா? தற்கொலை எண்ணத்தை கைவிட்டுவிட வேண்டும்.அதே போல வீட்டில் இருப்பவர்கள் போதை பழக்கத்திற்கு செல்லாமல் தடுப்பதுவும் நம் கையில் இருக்கிறது. அதனால் ஏற்படும் தீமைகள் குறித்து தந்தை மற்றும் சகோதரர்களுக்கு எடுத்துக்கூற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் சமூகசேவகி கர்லின்எபி குழுவினரின் போதை பொருளினால் ஏற்படும் தீமைகள் குறித்தான பொம்மலாட்டம் நடந்தது. இதில் கல்லூரி பேராசிரியர்கள் மாணவிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

The post சமூக வலைதளங்களில் படம் பகிர வேண்டாம் appeared first on Dinakaran.

Tags : Salem ,Assistant Commissioner of Police ,Dinakaran ,
× RELATED சூட்கேசில் சடலமாக மீட்கப்பட்டது 18...