×

மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்

சேலம், அக்.2: சேலம் மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட சேலம் நகர கோட்ட மின் நுகர்வோர்களுக்கான மாதாந்திர குறைதீர் கூட்டம் நாளை (3ம் தேதி) காலை 11 மணி முதல் மதியம் வரை சேலம் வெங்கட்ராவ்ரோட்டில் உள்ள நகர கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடக்கிறது. மேற்பார்வை பொறியாளர் திருநாவுகரசு கலந்துகொண்டு, குறைகளை கேட்டறிகிறார். அதனால், சேலம் நகர கோட்டத்திற்கு உட்பட்ட மின் நுகர்வோர்கள் நேரில் வந்திருந்து மின்சாரம் தொடர்பான குறைகள் இருந்தால், அதனை தெரிவித்து நிவர்த்தி செய்துகொள்ளலாம். இத்தகவலை செயற்பொறியாளர் சுமதி தெரிவித்துள்ளார்.

The post மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Salem ,Salem Venkata Road ,Dinakaran ,
× RELATED கிரேன் மோதி பெண் பலி