- வீரபாண்டி ராஜா நினைவிடம்
- தினம்
- சிறப்பு இரத்த தான முகாம்
- சேலம்
- கிழக்கு மாவட்ட தி.மு.க
- குழு
- சட்டமன்ற உறுப்பினர்
- வீரபாண்டி ராஜா
- வீரபாண்டியர்
- தின மலர்
சேலம், அக்.2: சேலம் கிழக்கு மாவட்ட திமுக முன்னாள் பொறுப்பாளர், தேர்தல் பணிக்குழு முன்னாள் செயலாளர் மற்றும் முன்னாள் எம்எல்ஏவுமான வீரபாண்டி ராஜாவின் 3ம் ஆண்டு நினைவு நாள் இன்று (2ம் தேதி) அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி சேலத்தில் அவரது நினைவாக, வீரபாண்டியார் நற்பணி மன்றம் சார்பில் ரத்ததான முகாம் நேற்று நடந்தது. குகை லைன்ரோட்டில் நடந்த நிகழ்ச்சிக்கு, திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினரும், வீரபாண்டி ஒன்றியக்குழு உறுப்பினருமான மலர்விழி ராஜா தலைமை வகித்து, ரத்ததான நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். குகை ரமேஷ், பொதுக்குழு உறுப்பினர் சந்திரமோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, ரத்ததானம் செய்தனர். இதனை சேலம் அரசு மருத்துவமனை ரத்த வங்கி அலுவலர் ரவீந்திரன் தலைமையிலான குழுவினர் சேகரித்தனர். பின்னர், ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில், 1,000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், நிர்வாகிகள் காந்தி, தாதை கார்த்தி, பனமரத்துப்பட்டி தர், ஜவகர், கோவிந்தராஜ், வெங்கடேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
The post வீரபாண்டி ராஜா நினைவு தினம் சிறப்பு ரத்ததான முகாம் appeared first on Dinakaran.