×

சனி பிரதோஷத்தை முன்னிட்டு சிவன் கோயில்களில் வழிபாடு

 

ராஜபாளையம், மே 25: ராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள சிவன் கோயில்களில் சனி பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. ராஜபாளையம் மதுரை சாலையில் உள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட மாயூரநாதசாமி கோயிலில் சனி பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக நந்திக்கு மஞ்சள், தேன், இளநீர், பால், தயிர், எலுமிச்சை, கரும்புச்சாறு, பன்னீர், சந்தனம் போன்ற பல்வேறு பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் நந்தி சுவாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டு விசேஷ சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. விழாவில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.இதே போல தெற்கு வெங்காநல்லூர் சிதம்பரேஸ்வரர் கோயில், சொக்கர்கோயில், ராஜபாளையம் அருகே வாழவந்தாள்புரம் மன்மத ராஜலிங்கேஸ்வரர் கோயில், சோழபுரம் விக்கிரபாண்டீஸ்வரர் கோயில் உள்பட பல்வேறு சிவன் கோவில்களில் பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

 

The post சனி பிரதோஷத்தை முன்னிட்டு சிவன் கோயில்களில் வழிபாடு appeared first on Dinakaran.

Tags : Shiva ,Shani Pradosham ,Rajapalayam ,Shiva temples ,Mayuranathasamy ,Hindu Religious and Charitable Endowments Department ,Madurai Road, Rajapalayam ,Shani Pradosham.… ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...