×

சடையம்பட்டி பத்திரகாளியம்மன் கோயிலில் சம உரிமை கோரி எம்எல்ஏவிடம் மனு

 

பொன்னமராவதி, ஜூலை 14: பொன்னமராவதி அருகே உள்ள சடையம்பட்டி பத்திரகாளியம்மன் கோயிலில் சம உரிமை கோரி தேவேந்திர குல வேளாளர் மக்கள் சட்டமன்ற உறுப்பினர் சின்னதுரையை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். மனு விவரம்:

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள மறவாமதுரை ஊராட்சி சடையம்பட்டி கிராமத்தில் உள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் தேவேந்திர குல வேளாளர் மக்களுக்கு வரி வசூல் உள்ளிட்ட அனைத்து நிகழ்வுகளிலும் சம உரிமை வேண்டும் மற்றும் பத்ரகாளி அம்மன் கோயிலை இந்து அறநிலைத்துறையே ஏற்று நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து சடையம்பட்டி கிராமத்தை சேர்ந்த பழனிவேல் தலைமையில் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தினர் சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரையை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

இதில், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் சங்கர், மாவட்ட செயற்குழு உறுப்பினர் நாராயணன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட தலைவர் சலோமி, மாவட்ட செயலாளர் ஜீவானந்தம், மாதர் சங்க மாவட்ட தலைவர் பாண்டிசெல்வி, மாதர் சங்க மாவட்ட செயலாளர் சுசீலா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

The post சடையம்பட்டி பத்திரகாளியம்மன் கோயிலில் சம உரிமை கோரி எம்எல்ஏவிடம் மனு appeared first on Dinakaran.

Tags : MLA ,Sadiyampatti Pathirakaliamman Temple ,Ponnamaravathi ,Devendra Kula Vellalar ,Chinnadurai ,Pudukkottai district ,Ponnamaravathi… ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...