×

கோ-ஆப்டெக்ஸில் ரூ.3 கோடிக்கு தீபாவளி விற்பனை இலக்கு

 

ஈரோடு, செப்.24: ஈரோடு மற்றும் கோபி கோ-ஆப்டெக்ஸ் நிறுவனங்களில் ரூ.3 கோடிக்கு தீபாவளி விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஈரோடு, காந்திஜி சாலையில் உள்ள வசந்தம் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையை கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தொடங்கி வைத்து பேசியதாவது : கைத்தறி ரகங்களுக்கு கோ-ஆப்டெக்ஸ் அனைத்து விற்பனை நிலையங்களிலும் 30 சதவீதம் அரசு சிறப்பு தள்ளுபடி வழங்கி வருகிறது.

மேலும் தீபாவளி சிறப்பு விற்பனைக்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நெசவாளர்களால் உற்பத்தி செய்யப்பட்ட புதிய வடிவமைப்புகளுடன் கூடிய பட்டு, பருத்தி சேலைகள், போர்வைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், வேட்டிகள், லுங்கிகள், துண்டு ரகங்கள், ஆடவர் அணியும் ஆயத்த சட்டைகள், மகளிர் விரும்பும் சுடிதார் ரகங்கள், ஆர்கானிக் பருத்தி சேலைகள் போன்றவை விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. தீபாவளியையொட்டி ஈரோடு கோ-ஆப்டெக்ஸில் ரூ.2.50 கோடியும், கோபிசெட்டிபாளையம் விற்பனை நிலையத்தில் ரூ.50 லட்சமும் என மொத்தம் ரூ.3 கோடி விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

The post கோ-ஆப்டெக்ஸில் ரூ.3 கோடிக்கு தீபாவளி விற்பனை இலக்கு appeared first on Dinakaran.

Tags : Diwali ,Co-Optex ,Erode ,Gobi Co-Optex ,Dinakaran ,
× RELATED போலி உரம், பூச்சிக்கொல்லி மருந்து...