×

கோவா முதலமைச்சராக 2வது முறையாக பாஜகவை சேர்ந்த பிரமோத் சாவந்த் பதவியேற்பு!!

பனாஜி: கோவா முதலமைச்சராக 2வது முறையாக பாஜகவை சேர்ந்த பிரமோத் சாவந்த் பதவியேற்றுக் கொண்டார். கோவா தலைநகர் பனாஜி நகரில் உள்ள டாக்டர் ஷியாம பிரசாத் முகர்ஜி மைதானத்தில் ஆளுநர் ஸ்ரீதரன் பிள்ளை முதல்வர் பிரமோத் சாவந்திற்கு பதவிப் பிரமாணம், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.இந்த பதவியேற்பு விழாவில், பிரதமர் மோடி, ஒன்றிய அமைச்சர்கள்,பாஜகவின் தேசிய தலைவர் ஜேபி நட்டா, பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் ஆளுநர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.கோவாவின் 40 சட்டப்பேரவைத் தொகுதிகளில் ஆளும் பாஜக 20 தொகுதிகளை கைப்பற்றி தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்தது. காங்கிரஸ் 11, சுயேச்சைகள் 3, ஆம் ஆத்மி 2, மகாராஷ்டிரவாதி கோமந்தக் 2, கோவா பார்வர்டு 1, புரட்சிகர கோன்ஸ் கட்சி ஓரிடத்தில் வெற்றி பெற்றன. ஆட்சியமைக்க 21 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை என்ற நிலையில் பாஜகவுக்கு ஒரு எம்எல்ஏவின் ஆதரவு தேவைப் பட்டது. இந்த சூழலில் 3 சுயேச் சைகள், 2 தொகுதிகளில் வெற்றி பெற்ற மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சி ஆகியவை பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்தன.இதைத் தொடர்ந்து கடந்த 21-ம் தேதி நடைபெற்ற பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் தற்போதைய முதல்வர் பிரமோத் சாவந்த், மீண்டும் முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். அன்றைய தினம் ஆளுநர் ஸ்ரீதரன் பிள்ளையை சந்தித்த சாவந்த் ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.இந்நிலையில், கோவாவின் முதல்வராக பிரமோத் சாவந்த் முதல்வராக இன்று பதவியேற்றார். தொடர்ந்து விஸ்வஜீத் ரானே, ரவி நாயக்,  நிலேஷ் கப்ரால், அடானாசியோ மான்செரேட் உள்ளிட்ட 8 பாஜக எம்எல்ஏக்கள், பிரமோத் அமைச்சரவையில் அமைச்சர்களாக பதவியேற்றனர். புதிய முதல்வர் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்கும் வகையில், ஆளுநரின் அறிவுறுத்தலின்படி கோவா சட்டப்பேரவையில் 2 நாள் சிறப்பு அமர்வு நாளை தொடங்குகிறது. இதில் பிரமோத் சாவந்த் நம்பிக்கை வாக்கெடுப்பு கோருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஸ்வஜீத் ரானே, ரவி நாயக்,  நிலேஷ் கப்ரால், அடானாசியோ மான்செரேட் உள்ளிட்ட 8 பாஜக எம்எல்ஏக்கள்,  அமைச்சர்களாக பதவியேற்றனர்….

The post கோவா முதலமைச்சராக 2வது முறையாக பாஜகவை சேர்ந்த பிரமோத் சாவந்த் பதவியேற்பு!! appeared first on Dinakaran.

Tags : BJP ,Pramod Sawant ,Goa ,Chief Minister ,Panaji ,Chief Minister of ,
× RELATED பழனி பஞ்சாமிர்தம் பற்றி வதந்தி: பாஜக நிர்வாகி செல்வகுமார் மீது வழக்கு