×

கோயில் திருவிழாவை முன்னிட்டு முளைப்பாரி ஊர்வலம்

ராஜபாளையம், மே 21: ராஜபாளையம் ஆர்ஆர் நகர் பகுதியில் அமைந்துள்ள மாரியம்மன் கோயில் மற்றும் முனியாண்டி கோயிலில் வைகாசி பொங்கல் திருவிழா கடந்த 13ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அதைத் தொடர்ந்து நேற்று 50க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் மற்றும் முளைப்பாரி எடுத்தும் ஊர்வலமாக சென்றனர். அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், திரவிய பொடி உட்பட 16 வகையான சிறப்பு அபிஷேகம் அலங்காரங்கள் நடந்தன. விழா ஏற்பாடுகளை ஆர்ஆர் நகர் குடியிருப்போர் நலச் சங்கம் தலைவர் ஜெகநாத ராஜா, நிர்வாக குழு உறுப்பினர்கள் மற்றும் விழா கமிட்டியாளர்கள் செய்திருந்தனர்.

The post கோயில் திருவிழாவை முன்னிட்டு முளைப்பாரி ஊர்வலம் appeared first on Dinakaran.

Tags : Mulapari procession ,Rajapalayam ,Vaikasi Pongal festival ,Mariamman Temple ,Muniyandi Temple ,RR Nagar ,Palkudam ,Mulapari ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...