×

கோயில் கும்பாபிஷேக விழா

நல்லம்பள்ளி, மே 24: நல்லம்பள்ளி ஒன்றியம் பாகலஅள்ளி கிராமத்தில் பிரசித்திபெற்ற மகாசக்தி மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து நேற்று முன்தினம் கும்பாபிஷேக விழா தொடங்கியது. காலை திருவிழா கொடியேற்றி, கங்காணம் கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து மகாசக்தி மாரியம்மனுக்கு தீர்த்தங்கள் தெளித்து, மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவில் பாகல்அள்ளி சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

The post கோயில் கும்பாபிஷேக விழா appeared first on Dinakaran.

Tags : Temple Kumbabhishek Festival ,Nallampalli ,Mahasakti Maryamman Temple ,Nallampalli Union Bhagalalli ,Mundinam Kumbapisheka ceremony ,Gangnam ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...