×

கோபி அருகே சிறுமியை கர்ப்பமாக்கிய சிறுவன் போக்சோவில் கைது

கோபி, நவ.14: கோபி அருகே 15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 17 வயது சிறுவன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது.கோபி அருகே உள்ள நம்பியூர் காவல் நிலைய பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமிக்கு உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து சிகிச்சைக்கக மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அப்போது, சிறுமி 6 மாத கர்ப்பிணியாக இருப்பது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து சிறுமியிடம் நடத்திய விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன், சிறுமியை காதலிப்பதாக கூறி, அவரது பெற்றோர் வேலைக்கு சென்ற பின்னர் தனிமையில் இருந்த சிறுமியிடம் பல முறை பாலியல் வன்கொடுமை செய்தது தெரிய வந்தது.

அதைத்தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் கோபி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து, சிறுவனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.

The post கோபி அருகே சிறுமியை கர்ப்பமாக்கிய சிறுவன் போக்சோவில் கைது appeared first on Dinakaran.

Tags : Kopi ,Gobi Gobi ,Gobi ,Pocso ,
× RELATED வாலிபர் மர்மச்சாவு குறித்து போலீஸ் விசாரணை