×

கோட்டைப்பட்டினத்தில் மீன் பிடித்த வாலிபர் கடலில் விழுந்து பலி

 

அறந்தாங்கி, ஜுலை. 2: கோட்டைப்பட்டினத்தில் கடலில் விசைபடகில் மீன் வலை இழுக்கும் போது கயிறு அறுந்து கடலில் தவறிவிழுந்து மீனவர் இறந்தார்.
புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டிம் ராம் நகரை சேர்ந்தவர் பாண்டி மகன் மந்திரமூர்த்தி(29). இவர், நேற்று முன்தினம் 14 நாட்டிக்கல் மைல் தொலைவில் சக மீனவர்களுடன் விசைப் படகில் மீன் பிடித்துள்ளனர். அப்போது, மந்திரமூர்த்தி மீன்வலையை இழுக்கும் போது வலை அறுந்து அவரது முதுகில் குண்டு வேகமாக அடித்து உள்ளது. இதில், படுகாயம் அடைந்த மந்திரமூர்த்தி கடல் தண்ணீருக்கு அடியில் சென்று மீண்டும் மேலே வரமுடியாத நிலையில் மூச்சு முட்டி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து, தகவலின் பேரில் கடலோர பாதுகாப்பு போலீசார் உடலை மீட்டு, மணமேல்குடி அரசு மருத்துவமணைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

The post கோட்டைப்பட்டினத்தில் மீன் பிடித்த வாலிபர் கடலில் விழுந்து பலி appeared first on Dinakaran.

Tags : Arantangi ,Bandi Mahan Mantramurthi ,Pudukkottai District, ,Kottapetim Ram Nagar ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...