×

கொள்ளிடம் பகுதியில் நாளை மின் நிறுத்தம்

 

சீர்காழி, ஜூலை 7: ஆச்சாள்புரம் துணை மின்நிலையத்திற்குபட்ட பகுதிகளில் நாளை மின்நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் மூர்த்தி வௌியட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சீர்காழி கோட்டத்திற்கு உட்பட்ட ஆச்சாள்புரம் துணை மின் நிலையத்தில் வருகிற 8ஆம் தேதி(நாளை) செவ்வாய்க்கிழமை பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் ஆச்சாள்புரம், மாங்கனாம்பட்டு, கொள்ளிடம், ஆணைக்காரன் சத்திரம், கோபாலசமுத்திரம் தைக்கால், சீயாளம், குமிளங்காடு, நாதல் படுகை, நல்லூர், துளசேந்திரபுரம், சரஸ்வதி விளாகம், மகேந்திரப்பள்ளி, புளியந்துறை, பழையார், புதுப்பட்டினம், மாதானம், பழையப் பாளையம், பச்சைபெருமாநல்லூர், தாண்டவன்குளம், மடவாமேடு, மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post கொள்ளிடம் பகுதியில் நாளை மின் நிறுத்தம் appeared first on Dinakaran.

Tags : Achalapuram substation ,Ayiladuthura ,District ,Sirkazhi Electricity Board ,Assistant Executive ,Murthy Voyutu ,Achalapuram ,Sirkazhi ,Dinakaran ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...