×

கொள்ளிடம் பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ள சம்பா சாகுபடி பயிர்கள்

 

கொள்ளிடம், நவ.30: கொள்ளிடம் வட்டாரத்திற்குட்பட்ட வேட்டங்குடி, வேம்படி, காட்டூர் ஆகிய பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ள சம்பா சாகுபடி பயிர்கள் மற்றும் வடிகால் வாய்க்கால் நீரோட்டங்களை கலெக்டர் மகாபாரதி நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே, வேட்டங்குடி, வேம்படி மற்றும் காட்டூர் கிராமத்தில் கடந்த 2 நாட்களாக பெய்த கனமழையினால் மழைநீர் சூழ்ந்துள்ள சம்பா பயிர்களை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு, விவசாயிகளுடன் கலந்துரையாடி, பயிர்களை ஆய்வு செய்தார்.

மேலும், மழைநீர் வடிவதற்கு தேவையான வடிகால் வசதிகள் குறித்து விவசாயிகளுடன் கேட்டறிந்தார். தொடர்ந்து, காட்டூர் வடிகால் வாய்க்கால் நீரொழுங்கியினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். வேளாண்மை துறை இணை இயக்குநர் சேகர்,நீர்வளத்துறை செயற்பொறியாளர் மாரிமுத்து, வட்டாட்சியர் அருள்ஜோதி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜான்சன், உமாசங்கர் மற்றும் அதிகாரிகள் விவசாயிகள் உடன் இருந்தனர்.

The post கொள்ளிடம் பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ள சம்பா சாகுபடி பயிர்கள் appeared first on Dinakaran.

Tags : Kolding ,Collector ,Mahabharati ,Vetangudi ,Vempadi ,Kattur ,Mayiladuthura District ,
× RELATED கூட்டுறவு சங்கத்திற்கு அதிக பால்...