×

கொள்ளிடம் குறுவைத் தொகுப்பு திட்டத்தின் கீழ் மானியம்

 

கொள்ளிடம், ஜூலை 6: குறுவை தொகுப்பு திட்டத்தின் கீழ் மானியம் பெற விவசாயிகள் விரைவில் விண்ணப்பிக்க வேளாண்துறை அறிவுறுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் வட்டார வேளாண் உதவி இயக்குனர் எழில்ராஜா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: குறுவை சாகுபடி திட்டத்தில் இயந்திரங்கள் மூலம் நெல் நடவு செய்துள்ள விவசாயிகளுக்கு அரசு மானியமாக ஒரு ஏக்கருக்கு ரூ.4,000 வீதம் வழங்கப்பட உள்ளது.
இத்திட்டத்திற்கு உரிய கால அவகாசம் மற்றும் தேதி விரைவில் நிறைவடையும் நிலையில் உள்ளது.
எனவே இயந்திரங்கள் மூலம் நெற்பயிர் நடவு செய்துள்ள விவசாயிகள் அனைவரும் இத்திட்டத்தில் பயனடைய உடனடியாக உழவன் செயலி அல்லது அருகில் உள்ள பொது சேவை மையம் அல்லது ஒவ்வொரு பகுதியிலும் உள்ள வேளாண்மை உதவி அலுவலர்கள் மூலம் பதிவேற்றம் செய்து மானியத்தைப் பெற்று
பயன் பெறலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

The post கொள்ளிடம் குறுவைத் தொகுப்பு திட்டத்தின் கீழ் மானியம் appeared first on Dinakaran.

Tags : Kollidam ,Agriculture Department ,Assistant ,Mayiladuthurai District ,Ezhilraja ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...