×

கொள்ளிடம் அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை மாநாடு

 

கொள்ளிடம், மே 28: கொள்ளிடம் அருகே பழையபாளையம் கிராமத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கிளை மாநாடு நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே பழையபாளையம் கிராமத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கிளை மாநாடு நடைபெற்றது. கட்சியின் மூத்த உறுப்பினர் கலியமூர்த்தி தலைமையேற்று கட்சி கொடியினை ஏற்றி வைத்தார். மாவட்ட செயலாளர் சீனிவாசன் மாநாட்டை துவக்கி வைத்து அரசியல் விளக்கவுரையாற்றினார்.
கூட்டத்தில் கடலோர பழையபாளையம் கிராமத்தில் தட்டுப்பாடு இன்றி குடிநீர் வழங்க வேண்டும், கட்டி முடிக்காமல் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை விரைந்து கட்டி முடிக்க வேண்டும், இறால் குட்டைகளில் உள்ள ரசாயனம் கலந்த கழிவுநீர் கிட்டியணை உப்பனாற்றில் வெளியேற்றபடுவதால் அது பிரதான புதுமண்ணியாற்றுக்குள் புகுந்து விளைநிலங்கள் உப்பு நீராக மாறுகிறது. எனவே இறால் குட்டை நடத்துவதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.

The post கொள்ளிடம் அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை மாநாடு appeared first on Dinakaran.

Tags : Communist Party of India ,Kollidam ,Pazhayapalayam village ,Kollidam, Mayiladuthurai district ,Communist ,Party ,of ,India ,Dinakaran ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...