×

கொல்லங்கோடு வட்டார தையல் கலைஞர் சங்க பேரவை கூட்டம்

நித்திரவிளை, ஜூன் 7: கொல்லங்கோடு வட்டார தையல் கலைஞர்கள் சங்க பேரவை கூட்டம் கண்ணநாகத்தில் நடந்தது. கொல்லங்கோடு வட்டார தலைவர் சனல்குமார் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு மாவட்ட துணை தலைவர் விஜயமோகன் தொடங்கி வைத்தார். வட்டார செயலாளர் மஞ்சு அறிக்கை தாக்கல் செய்தார். சங்க மாவட்ட செயலாளர் சந்திர கலா உட்பட பலர் வாழ்த்தி பேசினர். கூட்டத்தில் தையல் தொழிலாளர்களுக்கு தனி நிதி ஒதுக்க வேண்டும். தையல் தொழிலாளர் வாரியத்திற்கு மாநில அளவில் முத்தரப்பு குழு அமைக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.

The post கொல்லங்கோடு வட்டார தையல் கலைஞர் சங்க பேரவை கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Kollangode Regional Tailors Association Council Meeting ,Nithiravilai ,Kannanagam ,Kollangode ,Regional President ,Sanalkumar ,CITU ,District ,Vice President ,Vijayamohan ,Regional Secretary ,Manju ,Dinakaran ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...