×
Saravana Stores

கொலை வழக்கில் கைதான ரவுடி மீது குண்டாஸ்

திருச்சி, ஜூன் 9: திருச்சி அரியமங்கலம் எஸ்.ஐ.டி அருகே கடந்த ஏப்.30 ம்தேதி அரிவாள் மற்றும் வாள் போன்ற ஆயுதங்களால் அரியமங்கலம் திடீர்நகா் பகுதியை சோ்ந்த சாித்திர பதிவேடு ரவுடி முத்துகுமாரை வெட்டி கொலை செய்துவிட்டு, மா்ம நபா்கள் தப்பி சென்றனர். இதுகுறித்து பெறப்பட்ட புகாரின் போில், அரியமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் போலீசார் விசாரரணையில் இறந்த முத்துகுமாரின் உறவினரான லோகு மற்றும் தக்காளி முபாரக், தினேஷ், குமரேசன், தங்கமணி, இளஞ்செழியன், பிரசாத் ஆகியோர் சேர்ந்து கொலை செய்தது விசாரனையில் தெரிய வந்தது, இதனையடுத்து அனைவரையும் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்.

மேலும் ரவுடி முகமது முபாரக் (எ) தக்காளி முபாரக் மீது கண்டோன்மெண்ட் காவல் நிலையத்தில் 2 அடிதடி வழக்கு, 2 வழிப்பறி வழக்கு, கோட்டை காவல் நிலையத்தில் 3 அடிதடி வழக்கு, 1 வழிப்பறி வழக்கும், காந்திமார்க்கெட் காவல் நிலையத்தில் 1 திருட்டு வழக்கு, 2 வழிப்பறி வழக்கு, பாலக்கரை காவல் நிலையத்தில் 1 திருட்டு வழக்கு, 1 வழிப்பறி வழக்கு, 1 கஞ்சா வழக்கு, அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் 1 அடிதடி வழக்கு, 1 வழிப்பறி வழக்கு, ஏர்போர்ட் காவல் நிலையத்தில் 1 அடிதடி வழக்கு மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தில் 4 வழிப்பறி வழக்குகள் என மொத்தம் 22 வழக்குகள் நிலுவையில் உள்ளது விசாரணையில் தொியவந்தது.

எனவே அவரது தொடா் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு அரியமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அளித்த அறிக்கையினை பாிசீலனை செய்த திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார். அதனை தொடா்ந்து திருச்சி மத்திய சிறையில் குண்டர் தடுப்பு சட்டம் ஆணையினை சார்வு செய்து சிறையில் அடைத்தனர். மேலும் திருச்சி மாநகாில் இதுபோன்று குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

The post கொலை வழக்கில் கைதான ரவுடி மீது குண்டாஸ் appeared first on Dinakaran.

Tags : Tiruchi ,Tiruchi Ariyamangalam SIT ,Muthukumar ,Ariyamangalam police station ,Dinakaran ,
× RELATED காவிரியில் ஒதுங்கிய ராக்கெட் லாஞ்சர்