பெங்களூரு: சி.டி.ஸ்கேன் பரிசோதனைக்காக சசிகலா தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். மூச்சுத்திணறல் காரணமாக பெங்களூரு சிவாஜி நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரக்கூடிய சசிகலா தற்போது சி.டி. ஸ்கேன் பரிசோதனைக்காக விக்டோரியா மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படுகிறார். சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை காலம் முடிந்து வரும் 27ம் தேதி சிறையில் இருந்து சசிகலா விடுதலையாகிறார். அவரை வரவேற்க பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில் சசிகலாவிற்கு நேற்று திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது. மூச்சுத்திணறல் ஏற்படவே உடனடியாக அவரை பெங்களூரு சிவாஜி நகரில் உள்ள பௌரிங் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தனர். அவருக்கு ஆக்சிஜன் செலுத்தப்படுவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. அவரது உடல்நிலை சீராக இருப்பதாக கூறப்பட்ட நிலையில் மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு எடுக்கப்பட்ட ராபிட், பி.சி.ஆர். பரிசோதனையில் கொரோனா இல்லை என்பது தெரியவந்தது. தொடர்ந்து சிறையிலிருந்த சசிகலாவிற்கு நோய்த்தொற்று ஏற்பட்டிருக்கலாம் எனவும் அவருக்கு சி.டி.ஸ்கேன் எடுத்தால் தான் அடுத்தகட்ட வழிகள் பிறக்கும் என்று உறவினர்கள் தெரிவித்திருந்தனர். அதன் அடிப்படையில் தற்போது சசிகலாவுக்கு சி.டி.ஸ்கேன் எடுக்க முடிவு செய்தனர். இந்நிலையில், பவ்ரிக் மருத்துவமனையில் இருந்து விக்டோரியா மருத்துவமனைக்கு சசிகலா அழைத்து செல்லப்பட்டுள்ளார். கொரோனா இருக்கிறதா? இல்லையா? என்பதை உறுதி செய்யவே சசிகலாவுக்கு சி.டி.ஸ்கேன் எடுக்கப்படுகிறது. சி.டி. ஸ்கேன் எடுக்கப்பட்ட பின்னர், மூத்த மருத்துவர்களின் ஆலோசனை பெற்று மீண்டும் அரசு மருத்துவமனைக்கு சசிகலா அழைத்து செல்லப்படவுள்ளார். …
The post கொரோனா இருக்கிறதா? இல்லையா!: சி.டி. ஸ்கேன் பரிசோதனைக்காக தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படும் சசிகலா..!! appeared first on Dinakaran.