×

கொடைக்கானல் அடிசரை காட்டாற்றில் பாலம்அமைக்க மண் பரிசோதனை

கொடைக்கானல், ஆக. 1: கொடைக்கானல் வில்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பள்ளங்கி கோம்பை பகுதியல் உள்ளது அடிசரை. இப்பகுதியில் 100க்கும் மேற்பட்ட கிராமமக்கள் வசித்து வருகின்றனர். விவசாய நிலங்களும் உள்ளன. இவர்கள் இப்பகுதியில் உள்ள காட்டாற்றை கடந்து வர வேண்டிய நிலை உள்ளது. குறிப்பாக கடுமையான மழை காலங்களில் இந்த ஆற்றினை கடக்க முடியாமல் இப்பகுதி மக்கள் தவித்து வருகின்றனர். எனவே புதிய பாலம் அமைப்பதற்கு கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக ஒன்றிய தலைவர் ஸ்வேதா ராணி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கணேசன், மற்றும் இப்பகுதி உள்ளாட்சி பிரதிநிதிகள் நேற்று இப்பகுதியினை ஆய்வு செய்தனர். பாலம் அமைப்பதற்கு மண் பரிசோதனை மற்றும் ட்ரோன் மூலம் ஆய்வு செய்யப்பட்டது.

The post கொடைக்கானல் அடிசரை காட்டாற்றில் பாலம்அமைக்க மண் பரிசோதனை appeared first on Dinakaran.

Tags : Kodicanal Addisar Wild ,Kodakkanal ,Kodaikanal Wilbhatti Puradraki ,Addysar ,Dinakaran ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...